வடலூரில் மின்னல் தாக்கி முதியவர் பலி


வடலூரில்  மின்னல் தாக்கி முதியவர் பலி
x

வடலூரில் மின்னல் தாக்கி முதியவர் உயிாிழந்தாா்.

கடலூர்

வடலூர்,

வடலூர் அருகே உள்ள பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசாங்கம் (வயது 68) விவசாயி. மதியம் 2.30 மணியளவில் பார்வதிபுரம் பாய்பான்குட்டை ஏரி அருகில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் ராசாங்கம் படுகாயம் அடைந்தார். மேலும் அங்கிருந்த 2 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தனர். இதையடுத்து படுகாயமடைந்த ராசாங்கத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராசாங்கத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாாின்பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் காயம்

நெய்வேலி அருகே உள்ள ஆயிப்பேட்டை கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி ஜெயலட்சுமி(45). இவரும் அதே பகுதியை சேர்ந்த தணிகாசலம் மனைவி லலிதா(65) என்பவரும் மதியம் ஆயிப்பேட்டை காளி கோவில் அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு: சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று நெய்வேலி, வடலூர், காட்டுமன்னார்கோவில் உள்பட கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.


Next Story