வியாசர்பாடியில் 12 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்


வியாசர்பாடியில் 12 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்
x

வியாசர்பாடியில் 12 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமானது.

சென்னை

சென்னை வியாசர்பாடி இந்திரா காந்தி நகர் 20-வது தெருவில் நேற்று மதியம் குடிசை வீடுகள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கின. உடனடியாக சம்பவ இடத்திற்கு சத்தியமூர்த்தி நகர் மற்றும் கொருக்குப்பேட்டை இருந்து 2 தீயணைப்பு வண்டிகளில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் அப்பகுதியில் இருந்த 12 குடிசைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. மதிய நேரம் என்பதாலும், பெரும்பாலானவர்கள் வேலைக்கு சென்று இருந்ததாலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து குறித்து எம்.கே.பி. நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தீ விபத்துக்கு மின்கசிவு காரணமா? அல்லது சமூக விரோதிகள் தீ வைத்தனரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story