வாங்கலில், குதிரை வண்டி பந்தயம்
வாங்கலில், குதிரை வண்டி பந்தயம் நடந்தது.
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் கிழக்கு ஒன்றியம் வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி சார்பில் முதலாம் ஆண்டு குதிரை வண்டி பந்தயம் வாங்கலில் நடைபெற்றது. பந்தயம் புதிய குதிரை, நடுகுதிரை, பெரிய குதிரை ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்றன. இதில், கோவை, திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திண்டுக்கல், பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான குதிரைகள் பங்கேற்றன. பந்தயத்தில் 28 புதிய குதிரைகளும், 10 பெரிய குதிரைகளும், 12 நடுகுதிரைகளும் கலந்து கொண்டன. பந்தயத்தில் வாங்கலில் இருந்து பெரிய குதிரைகளுக்கு 10 மைல்களும், சிறிய குதிரைகளுக்கு 8 மைல்களும், புதிய குதிரைகளுக்கு 6 மைல்களும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டன. இந்த குதிரை பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் நின்று பொதுமக்கள் பார்த்து கண்டுகளித்தனர். பின்னர் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 4 இடங்களை பெற்ற குதிரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.