சுமைப்பணி தொழிலாளர் சங்க தொடக்க விழா
சுமைப்பணி தொழிலாளர் சங்க தொடக்க விழா நடந்தது.
வாணாபுரம் ஏ.ஐ.டி.யு.சி. சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். கவுரவதலைவர் தங்கவேல், துணை செயலாளர்கள் உமாநாத், ரமேஷ், துணை தலைவர் பாண்டியராஜ், பொருளாளர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெயர் பலகையை மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் திறந்து வைத்தார். அகில இந்திய துணை தலைவரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பராயன் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றினார். தொழிலாளர்களுக்கு சங்க உறுப்பினர் அட்டையை தேசிய செயலாளர் வஹிதா நிஜாம் வழங்கினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சவுரிராஜன், வி.தொ.ச. மாவட்ட செயலாளர் அப்பாவு, மாவட்ட குழு உறுப்பினர் கலியபெருமாள், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், ஆஷா பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஆண்டாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.