நெல்லையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி - சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு


நெல்லையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி - சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
x

நெல்லையில் இந்த ஆண்டு 2 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி தாமிரபரணி ஆற்றங்கரையில் தைப்பூச மண்டபம் அருகே மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

பின்னர் மரக்கன்றுகளை நட்டு பசுமை தமிழ்நாடு இயக்கத்தையும், தாமிரபரணி நதிக்கரையை சுத்தப்படுத்தும் பணிகளையும் அப்பாவு தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு நெல்லையில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், அடுத்த ஆண்டு 14 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

1 More update

Next Story