கட்டிடங்கள் திறப்பு விழா


வெம்பாக்கம் ஒன்றியத்தில் கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.

திருவண்ணாமலை

தூசி

வெம்பாக்கம் ஒன்றியத்தில் வடமாவந்தல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சத்தில் கட்டப்பட்ட சமையலறை கட்டிடம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.30 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை, அப்துல்லாபுரத்தில் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.27.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா வடமாவந்தல், அப்துல்லாபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனரும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்.

முன்னதாக நமண்டி கிராமம் பெரியார் நகரில் தி.மு.க. கொடியை மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஏற்றி வைத்து பொதுமக்களிடையே தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை குறித்து எடுத்துரைத்து இனிப்பு, அன்னதானம் வழங்கினார்

நிகழ்ச்சியில் அனக்காவூர் ஊராட்சிக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், திருவத்திபுரம் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல், ஒன்றியக்குழு உறுப்பினர் ஞானவேல், கவுன்சிலர் கே.விஸ்வநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், ஒன்றிய செயலாளர்கள் ஜே.சி.கே.சீனிவாசன், சங்கர், தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story