ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு


ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு
x
தினத்தந்தி 18 July 2023 12:03 AM IST (Updated: 19 July 2023 5:04 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்.

ராணிப்பேட்டை

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகக் கட்டிடம், நமக்கு நாமே திட்டத்தில் ரூ.27½ லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கழிப்பறை, ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8½ லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மாணவிகளுக்கான சிகிச்சை அறை என மொத்தம் ரூ.1 கோடியே 10 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களின் திறப்பு விழா நடந்தது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, கட்டிடங்களை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிகே குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர்கள் சே.வெங்கட்ரமணன், வடிவேலு. நகரமன்ற தலைவர்கள் ஹரிணி தில்லை, தமிழ்செல்வி அசோகன், ஜி.கே.உலகப் பள்ளி இயக்குனர் வினோத்காந்தி, செயற்பொறியாளர் செல்வகுமார், கல்லூரி முதல்வர் சீனிவாசன், விலங்கியல் துறைத் தலைவர் பூங்குழலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story