ரூ.1½ கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா
வள்ளியூர் யூனியனில் ரூ.1½ கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது.
திருநெல்வேலி
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் யூனியனில் தெற்கு வள்ளியூர், ஆ.திருமலாபுரம், அச்சம்பாடு, ஆனைகுளம், கோவன்குளம் ஆகிய பஞ்சாயத்துகளில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை, கழிவுநீர் வாறுகால் அமைத்தல் மற்றும் மயானம் செல்லும் சாலை அமைத்தல் ஆகிய வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
வள்ளியூர் யூனியன் தலைவரும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான சேவியர் செல்வராஜா தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்தையா, கண்ணன் பொறியாளர்கள் கணபதிராமன், ரமேஷ் மற்றும் கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story