குடிநீர் தொட்டி திறப்பு விழா


குடிநீர் தொட்டி திறப்பு விழா
x

அரியந்தக்கா கிராமத்தில் குடிநீர் தொட்டி திறப்பு விழா

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஊராட்சி அரியந்தக்கா கிராமத்தில் குடிநீர் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பாரதிதாசன், துரைமுருகன், ஒன்றியக்குழு துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணசாமி, செந்தில்முருகன், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமா வசந்தம்.கார்த்திகேயன் கலந்துகொண்டு ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்து பேசினார். விழாவில் கிளை செயலாளர்கள் செல்வகுமார், சிவமுருகன், ஊராட்சி தலைவர் வினிதாமகேந்திரன், துணைத்தலைவர் ஜெயக்குமார், நிர்வாகி இதயதுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story