இலக்கிய மன்ற தொடக்க விழா


இலக்கிய மன்ற தொடக்க விழா
x

உபதலை அரசு பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே உபதலையில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஐயரின் ரெஜி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வசித்தார். கோவை கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் செல்வி பேசும் போது, மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். பள்ளியில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். புத்தக வாசிப்பை தொடர்ந்து நேசிக்க வேண்டும் என்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் பேசும்போது, மாணவர்கள் முதலில் தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். என்னால் முடியும் என்ற விதையை மனதில் விதைக்க வேண்டும் என்றார். காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, பேச்சு, கட்டுரை, பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. முன்னதாக ஆசிரியை சித்ரா வரவேற்றார். முடிவில் ஆசிரியர் சிவகுரு நன்றி கூறினார்.


Next Story