சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் எந்திரவியல் மாணவர் பேரவை தொடக்க விழா
தாழையூத்து சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் எந்திரவியல் மாணவர் பேரவை தொடக்க விழா நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை தாழையூத்து சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் எந்திரவியல் மாணவர்கள் பேரவை தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சங்கரசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி சீனிவாசன் முன்னிலை வகித்தார். எந்திரவியல் துறை தலைவர் செல்லப்பா தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய முன்னாள் முதல்வர் முத்துசாமி கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் பருவ தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சிவசைலம், முருகன், சுந்தரவடிவேல், ரமேஷ் பிரபு, கண்ணன் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். முன்னதாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
Related Tags :
Next Story