ரூ.20 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு


ரூ.20 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு
x

கடையநல்லூர் அருகே ரூ.20 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் புதுக்குடி ஊராட்சி மங்களபுரத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 20.75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடத்தை அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு புதுக்குடி பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி இன்பராஜ், துணைத்தலைவர் சந்திரலேகா, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி முருகன் வரவேற்றார். விழாவில் மாவட்ட பொருளாளர் சண்முகையா, மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story