ஷாலோம் கிளினிக் திறப்பு விழா
பாளையங்கோட்டையில் ஷாலோம் கிளினிக் திறப்பு விழா நடந்தது.
பாளையங்கோட்டை மிலிட்டரி லைனில் ஷாலோம் கிளினிக் திறப்பு விழா நடந்தது. கிளினிக் டாக்டர் அருளின் பெற்றோரும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுமான செல்வ ரத்தினம், ஜெயசீலி மற்றும் டாக்டர் கிருபா ஜெயசோனியாவின் பெற்றோர் கில்சன், சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக குருவானவர் மதுரம் கலந்துகொண்டு கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். டாக்டர் அருள் வரவேற்றார்.
விழாவில் மருத்துவர்கள் கிளாட்வின், பாரத் ஸ்கேன் மருத்துவர் இம்மானுயேல், பூங்கோதை, வினோஜ், ஜாசன், ஜூலியட், பால் ராபின்சன் மற்றும் ஜோசப், பொன்னு, சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் மருத்துவமனை மேலாளர் மெல்டன், மருத்துவர் பால் ராபின்சன் மற்றும் ஜான்சன், கேபிரியேல் ஜேசுதாசன், ராமச்சந்திரன், உதயகுமார், மருத்துவர்கள் மஞ்சுளா, ஜான் சிங், சாம்சன் ரவி, ஷாலினி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழா முடிவில் டாக்டர் கிருபா ஜெயசோனியா நன்றி கூறினார்.