மாணவர் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு


மாணவர் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு
x

மாணவர் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் மன்ற நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர் மன்ற நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து பேசினார்.

மாணவர் மன்ற தலைவராக மணிகண்டன், துணை தலைவராக தேவ்நந்தன் விளையாட்டு அணி தலைவராக செவன்னா, துணை தலைவராக பர்ஷா மற்றும் இதர பிரிவு நிர்வாகிகள் பதவியேற்றனர்.

விழாவில் பள்ளி தாளாளர் வீரவேல் முருகன், இயக்குனர் ராஜராஜேஸ்வரி, செயல் இயக்குனர் சிவராஜ் பாண்டியன், பள்ளி முதல்வர் சக்திவேல் முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story