புதிய ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா


புதிய ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:46 PM GMT)

ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் படித்த பள்ளியில் புதிய ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழாவில் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு பங்கேற்றார்.

ராமநாதபுரம்

ஸ்மார்ட் வகுப்பறை

ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் எக்ஸ்போரியா குளோப் ஆப் கம்பெனி நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார். முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்த இந்த பள்ளி வகுப்பறையை பழமை மாறாமல் புதுப்பித்து மின்னணு திரையில் கல்வி கற்றிடும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

விடாமுயற்சி

அரசு பள்ளியில் படித்து, தனது லட்சியத்தால் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்ததற்கு அப்துல்கலாமின் விடாமுயற்சிதான் காரணம். அவரை முன்மாதிரியாக கொண்டு மாணவ, மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

விழாவில் மாணவர்களுக்கு கண் கண்ணாடிகளை முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, கலெக்டர் விஷ்ணு சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் வழங்கினர். எக்ஸ்போரியா குலோப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் சசிநாயர், நாகா, சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜோசப் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story