போக்குவரத்து போலீஸ் நிலைய கட்டிடம் திறப்பு
போக்குவரத்து போலீஸ் நிலைய கட்டிடம் திறக்கப்பட்டது.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் அருகே போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் ரூ.99 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.
இதையடுத்து ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நேரில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
இதில் ராஜபாளையம் (பொறுப்பு) துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லாவண்யா, தாசில்தார் ராமச்சந்திரன், தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்து தலைவர் இசக்கிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story