நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு
சிதம்பரத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம்,
சிதம்பரம் நகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட எடத்தெருவில் புதிதாக நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து புதிதாக திறக்கப்பட்ட நலவாழ்வு மையத்தில் நடந்த விழாவில் நகர மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் மகாராஜன், நகர மன்ற துணை தலைவர் முத்துக்குமரன், சிவக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மங்கையர்க்கரசி, கவுன்சிலர்கள் தில்லை ஆர்.மக்கின், அப்பு. சந்திரசேகரன், ஏ.ஆர்.சி.மணிகண்டன், ராஜன், தி.மு.க.நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், இளங்கோவன், இளைஞரணி அமைப்பாளர் மக்கள் அருள், சுகாதார ஆய்வாளர் பிரவீன், டாக்டர் நிவேதா, வட்டார மேற்பார்வையாளர் ராஜராஜன் உள்பட கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.