காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஒரத்தூர் முதல் நிலை ஊராட்சியில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கேடயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா ஒரத்தூரில் நடைபெற்றது. விழாவுக்கு ஒரத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், குன்றத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. துணைச்செயலாளருமான என்.டி.கற்பகம் சுந்தர் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் என்.டி.சுந்தர், காஞ்சீபுரம் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட பாசறை தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாணிக்கராஜ், சந்திரபாபு, முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும் குன்றத்தூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான பழனி கலந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொது தேர்வில் வெற்றி பெற்ற 89 மாணவ- மாணவிகளுக்கு கேடயம் மற்றும் ஊக்கத்தொகையை பரிசாக வழங்கினார். இதில் அ.தி.மு.க. கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், பாபு, ராமச்சந்திரன், ரஞ்சித் குமார், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.