பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x

சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

சென்னை,

சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்கள், வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.

குஜராத்தில் நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் பதங்கங்களை வென்ற 180 வீரர், வீராங்கனைகள், 2019-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச மாற்றுதிறனாளிகள் போட்டி மற்றும் ஆசிய ஆக்கி போட்டியில் பதக்கங்களை வென்ற 10 வீரர்களுக்கு ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்களுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.


Next Story