பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை
கடையநல்லூர் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே பொய்கை உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொய்கை மாரியப்பன் ஆண்டு தோறும் 10-ம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களை பிடிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கி வருகிறார். அதுபோல் இந்த ஆண்டும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொய்கை மாரியப்பன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் செய்யது அலி காதர் பாத்திமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, முதலிடம் பிடித்த மாணவி வீரக்குமார ஈஸ்வரிக்கு ரூ.10,000, 2-வது இடம் பிடித்த மாணவர் சுஜித்குமார் நிதின் தினேசுக்கு ரூ.5,000, 3-வது இடம் பிடித்த சூரிய பிரகாசுக்கு ரூ.3,000 வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பொதுமக்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.