குமரியில் தொடர்மழை:இரணியலில் 26 மி.மீ. பதிவு
குமரியில் தொடர்மழை: இரணியலில் 26 மி.மீ. பதிவு
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் காலை, மதிய நேரங்களில் விட்டு, விட்டு மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 12.8, பெருஞ்சாணி அணை- 6, புத்தன் அணை- 7.4, சிற்றார்-1 அணை- 9.2, சிற்றார்-2 அணை- 4, மாம்பழத்துறையாறு அணை- 10.2, முக்கடல் அணை- 2.3, பூதப்பாண்டி- 3.2, களியல்- 9.2, கன்னிமார்- 2.4, கொட்டாரம்- 5.2, குழித்துறை- 11.5, மயிலாடி- 10.4, நாகர்கோவில்- 9.2, சுருளக்கோடு- 8.6, தக்கலை- 12, குளச்சல்- 12.4, இரணியல்- 26, பாலமோர்- 21.6, திற்பரப்பு- 8.7, கோழிப்போர்விளை- 8.5, அடையாமடை- 4.1, குருந்தங்கோடு- 13.2, முள்ளங்கினாவிளை- 8.2, ஆனைக்கிடங்கு- 8.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக இரணியல் பகுதியில் 26 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.