நொய்யல் பகுதியில் தொடர் மழை: விவசாயம் பாதிப்பு


நொய்யல் பகுதியில் தொடர் மழை: விவசாயம் பாதிப்பு
x

நொய்யல் பகுதியில் பெய்த தொடர் மழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கரூர்

பயிர்கள் அழுகும் நிலை

கரூர் மாவட்டம், நொய்யல் நல்லிக்கோவில், குந்தாணிபாளையம், நத்தமேடு, குப்பம், அத்திப்பாளையம், குறுக்குச்சாலை, மரவாபாளையம், சேமங்கி, வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், முத்தனூர், சேமங்கி, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், கட்டிப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேடு, கோம்புப்பாளையம், நடையனூர், பேச்சிப்பாறை, பாலத்துறை, கந்தம்பாளையம், கொங்கு நகர், மூலமங்கலம், பழமாபுரம், குட்டக்கடை, பசுபதிபாளையம், புன்னம் சத்திரம், உப்புப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து கொண்டிருந்தது. கனமழை பெய்து வருவதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. மழை நீரை வெளியேற்ற முடியாததால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவதி

கிராமப்புறங்களில் உள்ள கிணறுகள் வற்றிய நிலையில் உள்ளது. கன மழையின் காரணமாக வற்றிய கிணறுகளில் நீரூற்று எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அதேபோல் வாடிய பணப்பயிர்கள் செழித்து வளரும் நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். மழை நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பலத்த மழையின் காரணமாக தார் சாலைகளில் இருபுறமும் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் பெரிய வாகனங்கள் செல்லும்போது மழைநீர் பட்டு இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது மழை நீர் தெளிக்கிறது.

வியாபாரம் பாதிப்பு

இதனால் இருசக்கர வாகனஓட்டிகளின் உடைகள் நனைந்து அவதிப்பட்டு சென்றனர். பலத்த மழையின் காரணமாக சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த பழக்கடைகள், பலகார கடைகள், ஜவுளிக்கடைகள், உணவு பொருள் விற்பனை செய்யும் கடைகள், மண்பானை விற்பனை செய்யும் கடைகள், பூக்கடைகள் மற்றும் தள்ளுவண்டிக் கடைகள் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிப்படைந்தனர். சாலை ஓர கடைக்காரர்கள், கட்டில் கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள், சாலை ஓர கடை வியாபாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிப்படைத்து வருகின்றனர்.


Next Story