கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை..!


கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை..!
x
தினத்தந்தி 11 July 2023 9:53 AM IST (Updated: 11 July 2023 11:26 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர்,

அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரது சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை சோதனை நடந்தது. சென்னை, கரூர், கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. கரூரில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை 8 நாட்கள் சோதனை நீடித்தது.

இந்த நிலையில் 3-வது முறையாக தற்போது வருமான வரித்துறையினர் கரூரில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக உள்ள ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

கொங்கு மெஸ் மணி வீட்டில் மட்டும் 2 காரில் வந்த 6 அதிகாரிகள் காலை 8.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் வீட்டில் யார் யார் இருக்கின்றார்கள் என்பதை உடனடியாக உறுதிபடுத்த இயலவில்லை. இந்த சோதனையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 8 நாட்கள் கொங்கு மெஸ் மணி வீட்டில் சோதனை நடைபெற்றுள்ள நிலையில் மீண்டும் அவரது வீட்டை குறிவைத்து வருமானவரிதுறை சோதனை தொடங்கியுள்ளது கரூரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story