சவுகார்பேட்டை நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை


சவுகார்பேட்டை நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை
x

சவுகார்பேட்டை பகுதியில் வரி ஏய்ப்பு செய்ததாக தங்க நகைக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை

சென்னை, சவுகார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கம், வைரம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்யும் சந்தை உள்ளது. இது மும்பைக்கு அடுத்தபடியாக பெரிய சந்தையாகும்.

இங்கு நாள்தோறும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றை வாங்குவதற்காக நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து செல்வார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் நகைக்கடை உரிமையாளர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அப்போது அப்பகுதியில் வரி ஏய்ப்பு செய்வதாக தகவல்கள் தெரியவந்தது

அதன் அடிப்படையில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வரி ஏய்ப்பில் தங்கநகை வியாபாரி ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது.

அதன் பெயரில் சவுகார்பேட்டை, துளசிங்கம் தெருவில் உள்ள ராதா மோகன் புருஷோத்தம் தாஸ் என்ற பெயரில் பிஷ்ரால் சீதாராம் என்பவர் தங்கம், வெள்ளி மற்றும் வைரம் நகை வியாபாரம் மற்றும் பைனான்ஸ் செய்து வருகிறார்.

இவர் கடந்த 2 ஆண்டுகளாக கீழ்ப்பாக்கத்தில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். சவுகார்பேட்டை துளசிங்கம் பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய 2 மகன்களும் ஷேர் மார்க்கெட் தொடர்பான தொழில் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அவருடைய கடையில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருவதாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story