கரூரில் 8 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு


கரூரில் 8 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு
x

வரி ஏய்ப்பு தொடர்பாக கரூரில் 8-வது நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

சென்னை,

கரூரில் வரி ஏய்ப்பு தொடர்பாக கடந்த 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர். இதனால் அதிகாரிகள் சோதனை செய்யாமல் சென்று விட்டனர். இதனையடுத்து மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் தொடர்ந்து கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையின் போது ஒருசில இடங்களுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்தனர். மேலும் ஒருவருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். இந்நிலையில் 8-வது நாளாக இன்றும் கரூரில் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில், 8 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.


Next Story