இமாசல பிரதேசம், காஷ்மீரில் இருந்து சேலத்துக்கு ஆப்பிள் வரத்து அதிகரிப்பு-கிலோ ரூ.70-க்கு விற்பனை


இமாசல பிரதேசம், காஷ்மீரில் இருந்து சேலத்துக்கு ஆப்பிள் வரத்து அதிகரிப்பு-கிலோ ரூ.70-க்கு விற்பனை
x

இமாசல பிரதேசம், காஷ்மீரில் இருந்து சேலத்துக்கு ஆப்பிள் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சேலம்

ஆப்பிள் வரத்து அதிகரிப்பு

இந்தியாவில் இமாசல பிரதேசம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அதிகளவு ஆப்பிள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் நவம்பர் மாதம் வரை ஆப்பிள் விளைச்சல் அமோகமாக இருக்கும். தற்போது அங்கு விளைச்சல் அதிகரித்து உள்ளது.

இதன்காரணமாக இமாசல பிரதேசம், காஷ்மீரில் இருந்து சேலம் மார்க்கெட்டுகளுக்கு நாள் ஒன்றுக்கு 30 டன் முதல் 40 டன் வரை ஆப்பிள்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த ஆப்பிளை நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, மேட்டூர், ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சில்லரை வியாபாரிகள் சேலத்துக்கு வந்து வாங்கி சென்று விற்பனை செய்கின்றனர்.

விலை சரிவு

தற்போது ஆப்பிள் சீசன் களை கட்டி உள்ளதால் சேலத்தில் அதன் விலை சரிந்துள்ளது. பெரிய பழக்கடை முதல் தள்ளுவண்டி கடை வரை ஆப்பிளை அடுக்கடுக்காக அடுக்கி வைத்து விற்கப்பட்டு வருகிறது. சேலம் கடைவீதியில் வியாபாரிகள் பலர் தள்ளுவண்டியிலும், தரையில் கடை போட்டும் ஆப்பிளை விற்று வருகின்றனர்.

சிறிய ஆப்பிள் கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரையும், பெரிய ஆப்பிள் ரூ.120 வரையும் விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிள் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் பலர் அதை வாங்கி செல்கின்றனர்.


Next Story