கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: பொள்ளாச்சியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்-கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் அதிகரிப்பு:   பொள்ளாச்சியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்-கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கோழிப் பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி ஆங்காங்கே நடக்கிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கோழிப் பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி ஆங்காங்கே நடக்கிறது.

கிருமி நாசினி தெளிப்பு

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் காரணமாக கோழிகள் இறந்தன. மேலும், ஆலப்புழா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாத்துகள் பரிதாபமாக இறந்தன. இதன் எதிரொலியாக தமிழக அரசு மற்றும் கால்நடை பராமரிப்பு சார்பில், பறவைக்காய்ச்சல் தமிழகத்தில் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் மூலம் கிருமிகள் பராவாமல் இருக்க அந்த வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இதன்படி கறிக்கோழி பண்ணைகள் பரவலாக உள்ள பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, பல்லடம், உடுமலை பகுதியில் கோழிப்பண்ணைகள், இறைச்சிகடைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.

சுகாதாரத்துறையினர் அறிவுரை

இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்களிடம் சுகாதாரத்துறையினர் கூறியதாவது:- பறவைக் காய்ச்சல் வராமல் தடுக்க ஒரு பண்ணையில் இருந்து மற்ற பண்ணைகளுக்கு மண்வெட்டி, தட்டு போன்ற பொருள்கள், தீவனங்கள் எடுத்துச் செல்லக்கூடாது. வெளியில் இருந்து பண்ணைக்கு கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள் கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதிக்க வேண்டும். புதிதாக பண்ணைக்குள் ஆட்களை அனுமதிக்ககூடாது. வேலையாட்களை கிருமிநாசினி கொண்டு கை, கால்களை சுத்தம் செய்த பின்பே பண்ணைக்குள் அனுப்பவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story