கிராமங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு


கிராமங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
x

கோத்தகிரி அருகே கிராமங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதிகளையொட்டி குமரமுடி, கரிக்கையூர், அரக்கோடு, குள்ளங்கரை, முடியூர், வக்கனாமரம், மெட்டுக்கல் உள்பட 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்தநிலையில் தற்போது நிலவும் பலாப்பழ சீசன் காரணமாக மரங்களில் காய்த்து உள்ள பழங்களை திண்பதற்காக, காட்டு யானைகள் படையெடுக்க தொடங்கி உள்ளன. மேலும் யானை கூட்டங்கள் அங்குள்ள தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு, பகல் மற்றும் இரவு நேரங்களில் பலா பழங்களைத் தேடி குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் உலா வருகின்றன. காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, தேயிலை, காபி தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story