தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
ராஜபாளையம்,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
தொடர்மழை
ராஜபாளையம் நகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அய்யனார் கோவில் ஆற்றில் மழை நீர் வருவதால் 6-வது மைல் குடிநீர் தேக்கத்திற்கு மதகு வழியாக மழைநீர் திருப்பி விடப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நகர் பகுதியில் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துடன் செல்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இ்ந்த தொடர் மழையால் அய்யனார் கோவில் ஆற்றில் மழை நீர் வருவதால் 6-வது மைல் குடிநீர் தேக்கத்திற்கு மதகு வழியாக மழைநீர் திருப்பி விடப்பட்டுள்ளது. ஆதலால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. நிலத்தடி நீர் மட்டமும் உயரும்.
தொடர்மழையினால் ராஜபாளையம் நகர் பகுதிகளில் ஆங்காங்கே சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.