மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!
x

மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது

கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.இந்த நிலையில் மேட்டூர் அணையில் 74,588 கன அடியாக இருந்த நீர்வரத்து 82,642 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 113.960 அடியாக அதிகரித்துள்ளது நீர் இருப்பு - 84.16 டிஎம்சி,ஆக உள்ளது அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 20,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story