ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு


ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Sept 2023 2:30 AM IST (Updated: 7 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கனமழை பெய்து வருவதால், ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் கனமழை பெய்து வருவதால், ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

பருவமழை

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்க வேண்டிய மழை இந்த ஆண்டு கிடைக்கவில்லை. இதன் காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. மேலும் மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து மே மாத இறுதி வாரம் வரை கிடைத்த மழை நீரை கொண்டுதான் தற்போது வரை மின் உற்பத்தி நிலையங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர் ந்து மின் உற்பத்தி நிலையங்கள் இயக்கப்படுவதால், அணைகளில் இருக்கும் தண்ணீரும் குறைந்து வருகிறது.

தண்ணீர் வரத்து...

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி முதல் வால்பாறை பகுதியில் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் சோலையாறு, கருமலை ஆறு, வெள்ளமலை ஆறு ஆகிய ஆறுகளுக்கும், பிர்லா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளுக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி மேல்நீராறில் 31 மி.மீ. மழையும், சோலையாறு அணையில் 25 மி.மீ. மழையும், கீழ் நீராரில் 15 மி.மீ. மழையும், வால்பாறையில் 13 மி.மீ. மழையும் பெய்துள்ளது.


Next Story