அருவி, கண்மாய்களில் நீர்வரத்து அதிகரிப்பு


அருவி, கண்மாய்களில் நீர்வரத்து அதிகரிப்பு
x

அருவி, கண்மாய்களில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாழைகுளம், மறவன்குளம், பெரியகுளம் உள்பட பல்வேறு கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்கள் மூலம் எண்ணற்ற பேர் பயன்பெற்று வருகின்றனர். இந்தநிலையில் ஒரு சில கண்மாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையினால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அதேபோல செண்பகத்தோப்பு மீன் வெட்டி அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கண்மாய்களில் நீர்வரத்து அதிகரித்தால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ெதாடர்மழையினால் நிலத்தடி நீரும் உயர்ந்து இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். ஒரு சில பகுதிகளில் இந்த மழைைய பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர்.



Next Story