மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.
சேலம்
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் மாலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 562 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 5 ஆயிரத்து 18 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 48.48 அடியாக இருந்தது.
Next Story