முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது

தேனி

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 135.90 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 643 கன அடியாகவும் இருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி இன்று அணையின் நீர்மட்டம் 135.95 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 1081 கன அடியாக அதிகரித்தது. வெளியேற்றம் வினாடிக்கு 933 கன அடியாக உள்ளது.


Next Story