ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரிப்பு


ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தண்ணீர் திறப்பு

மதுரை வைகை அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வைகை அணையில் இருந்து உபரி நீரானது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதுபோல் வைகை அணையில் இருந்து கடந்த 5 நாட்களுக்கு மேலாகவே ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உபரி நீர் அதிக அளவு வந்து கொண்டிருக்கிறது. மழை பெய்ததால் வைகை ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது.

இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இது பற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது:-

பெரிய கண்மாய்

மதுரை வைகை அணையில் இருந்து தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கும் கடந்த 5 நாட்களாகவே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 200 கன அடிநீர் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வருகிறது. வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளதால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வரக்கூடிய தண்ணீரும் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாயில் மொத்தம் 1,225 மில்லியன் கன அடிநீர் தேக்கி வைக்க முடியும். தற்போது 225 கன அடி நீர் மில்லியன் தண்ணீர் இருப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றாக விளங்கும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் ஆர்.எஸ். மங்கலம் யூனியனை சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story