தொடர் மழையினால் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
வெம்பக்கோட்டை பகுதிகளில் தொடர்மழையினால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதிகளில் தொடர்மழையினால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
தொடர்மழை
வெம்பக்கோட்டை மற்றும்அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வல்லம்பட்டி கண்மாய் உள்பட கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை, ராஜாபாளையம் பகுதியில் பெய்து வரும் கன மழையினால் வெம்பக்கோட்டை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் வரை அணையில் 14 அடி உயரம் இருந்தது. தற்போது 3 அடி உயரம் தண்ணீர் அதிகரித்து 17 அடியாக அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அணையின் மொத்தம் நீர்மட்டம் 24 அடி உயரம் ஆகும். மேலும் வானிலை அறிக்கையில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளதால் அணை நிரம்ப வாய்ப்புள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
கோடைகாலத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்ப வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏழாயிரம்பண்ணை, கோட்டைப்பட்டி, சங்கரபாண்டியாபுரம், குகன்பாறை, சிப்பி பாறை உள்ளிட்ட பகுதியில் நேற்று இரவு பெய்த மழை நள்ளிரவு வரை தொடர்ந்து பெய்ததால் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கோட்டைப்பட்டியில் இருந்து தாயில்பட்டி வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.