வெம்பக்கோட்டை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


வெம்பக்கோட்டை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

வெம்பக்கோட்டை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ெபாதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ெபாதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நீர்மட்டம் உயர்வு

சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையில் தொடர்ந்து நீர் வரத்து காரணமாக அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக ராஜபாளையம் அருகே உள்ள தேவிபட்டினத்தில் இருந்து தேவியாறு வழியாக ராமு தேவன்பட்டி வரத்துக்கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைப்பாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் வரை வெம்பக்கோட்டை அணையில் நீர்மட்டம் 12 அடி உயரமாக இருந்தது. ஒரே நாளில் 4 அடி உயரம் உயந்துள்ளது. இதனால் தற்போது நீர்மட்டம் 16 அடியாக உள்ளது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் போதிய மழை பெய்யாவிட்டாலும் அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மக்காச்சோளம், நெல், பருத்தி, பயிரிடடுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணையில் நீர்மட்டம் 20 அடியாக உயர்ந்த பின்னர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படும். மேலும் அணையில் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் சிவகாசி மாநகராட்சிக்கு தண்ணீர் கூடுதலாக வினியோகம் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர்.


Next Story