மேட்டூர் அணையில் இருந்துதண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிப்புவினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்


மேட்டூர் அணையில் இருந்துதண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிப்புவினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
x
சேலம்

மேட்டூர்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பாசனத்தின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்த நிலையிலேயேஉள்ளது.

இந்த நிலையிலும் டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.

மீண்டும் அதிகரிப்பு

கடந்த 12-ந் தேதி முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதன் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரத்து 159 கனஅடியாக இருந்தது. டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் தேவை மேலும் அதிகரித்ததை கருத்தில் கொண்டு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக வெளியேற்றப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 54.70 அடியாக இருந்தது.


Next Story