மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ள:து.

சேலம்

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த 2 வாரங்களாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை அதிகரித்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் 3 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 110 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இதனால் அணையில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு வரும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 54.40 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story