மாமரங்களில் விளைச்சல் அதிகரிப்பு


மாமரங்களில் விளைச்சல் அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெகமம் பகுதியில் மாமரங்களில் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் பகுதியில் மாமரங்களில் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மாமரங்களில் விளைச்சல்

நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மரப்பயிர்களுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ளது. இதனால் அதிகப்படியான இடங்களில் மா விவசாயத்தில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மாந்தோப்புகள் அதிகமாக உள்ளன.

தற்போது மாமரங்களில் காய்ப்புத்திறன் கூடி விளைச்சல் அதிகரித்துள்ளது. விரைவில் அறுவடைக்கு தயாராகிவிடும் என்பதால், பூச்சி கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம் பூக்கள் அதிகளவில் பூத்து உள்ளதால், விளைச்சல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இனிப்புத்தன்மை கொண்டது

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- மாங்கன்றுகள் நட்டு 4 ஆண்டுகளில் இருந்து பலன் தரும். கோடை காலங்களில் விளைச்சல் உச்ச நிலையில் இருக்கும். இந்த பகுதியில் விளையும் மாங்காய்கள் அதிக தசைப்பிடிப்புடன், இனிப்புத்தன்மை நிறைந்ததாக இருப்பதால், பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. பூக்கள் அதிகம் இருந்தாலும், அவை உதிராமல் இருந்தால்தான், அதிக காய்களை பெற முடியும். குறைவான பராமரிப்பு, கூலி ஆட்கள் தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பலரும் மா விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். விளைச்சலை மேலும் அதிகரிக்க பராமரிப்பு பணிகளில் விவசாயம் மும்முரம் காட்டி வருகின்றனர்.

1 More update

Next Story