ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு; 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை


ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு; 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை
x

இன்று 3-வது நாளாக ஒகேனக்கல் அருவிகள் மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டது.

பென்னாகரம்,

காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் காரணமாக இன்று 3-வது நாளாக ஒகேனக்கல் அருவிகள் மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளை தண்ணீர் மூழ்கடித்தபடி பாறைகள் தெரியாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஐந்தருவி தெரியாதபடி தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டபடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.


Next Story