அடுத்த மாதம் 26 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு


அடுத்த மாதம் 26 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
x

கோப்பு படம்

தினத்தந்தி 7 Jan 2024 2:13 PM GMT (Updated: 7 Jan 2024 4:30 PM GMT)

கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் மார்ச் 1 ஆம் தேதி தொடங்க உள்ள பிளஸ் டூ தேர்வை புறக்கணிக்கவும் தயங்க மாட்டோம் என்று ஜாக்டோ ஜியோ கூறியுள்ளது.

சென்னை,

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்

அரசு துறைகளில் காலியாக இருக்கும் 30 சதவீதத்துக்கு மேலான இடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள், அரசு ஊழியர்கள் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்தி வருகிறது

இந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஜாக்டோ - ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூடி ஆலோசித்தனர். பின்னர் ஜாக்டோ ஜியோ கூறியதாவது: "வரும் 30 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் பிப்ரவரி 15 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும்.

அதன்பிறகும் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த மாதம் 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும். அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மார்ச் 1 ஆம் தேதி தொடங்க உள்ள பிளஸ் டூ தேர்வை புறக்கணிக்கவும் தயங்க மாட்டோம்" என்று கூறப்பட்டுள்ளது.


Next Story