சுதந்திர தின விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
சுதந்திர தினம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரியலூர்
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மொத்தம் 450 மாணவ, மாணவிகள், நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 என்ற எண் வடிவில் நின்று யோகா செய்தும், கொடி வணக்கம் செலுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். 75 என்ற எண்ணை வடிவமைத்து உதவி செய்த ஓவிய ஆசிரியர் மாரியப்பன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story