சுதந்திர தின கொண்டாட்டம்


சுதந்திர தின கொண்டாட்டம்
x

அருப்புக்கோட்டை பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

நகராட்சி அலுவலகம்

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தேசிய கொடியை ஏற்றினார். நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், என்ஜினீயர் ரவீந்திரன் முன்னிலை வகித்தனர்.

துணைத்தலைவர் பழனிச்சாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு சுதந்திர தின சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற உறுப்பினர்கள் கோகுல், இளங்கோ, செந்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் முத்துகிருஷ்ணன் கொடியேற்றினார், தாசில்தார் அலுவலகத்தில் தலைமை துணை தாசில்தார் நாகேஷ் கொடியேற்றினார். வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலர் கண்ணன் கொடியேற்றினார்.

நீதிமன்றம்

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி ராமலிங்கம் கொடியேற்றினார். இதில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கலைநிலா, குற்றவியல் நீதிபதி முத்து இசக்கி, வழக்கறிஞர் சங்கத்தலைவர் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மகளிர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய் கொடி ஏற்றினார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கொடியேற்றினார். உமா மாலினி, சேதுராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். தாலுகா போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டர் வேல்முருகன் கொடியேற்றினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் அரங்கநாயகம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் இளங்கோ கொடியேற்றினார். இதில் மருத்துவர்கள் சந்திர மவுலி, அருணாச்சலம், தலைமை செவிலியர் சாந்தி, மருந்தாளுனர் மணிசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story