சுதந்திர தின விழா


சுதந்திர தின விழா
x

பாளையங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

சுதந்திர தினத்தையொட்டி பாளையங்கோட்டை மகாராஜநகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தேசிய கொடி ஏற்றினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர் ரெட்டியார்பட்டி கு.ரா.அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தேசிய கொடியேற்றி மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, வட்டார தலைவர்கள் கனகராஜ், நளன், கணேசன், கவுன்சிலர் தெய்வானை, மகிளா காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் குளோரிந்தாள், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் ராஜ்குமார், கொங்கந்தான்பாறை கிராம காங்கிரஸ் தலைவர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story