75-வது ஆண்டு சுதந்திர தினவிழா: தேசிய கொடியுடன் தபால் ஊழியர்கள் பேரணி


75-வது ஆண்டு சுதந்திர தினவிழா:  தேசிய கொடியுடன் தபால் ஊழியர்கள் பேரணி
x

75-வது ஆண்டு சுதந்திர தினவிழாவையொட்டி தேசிய கொடியுடன் தபால் ஊழியர்கள் பேரணி சென்றனா்.

கடலூர்


விருத்தாசலம்,

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வருகிற 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக் கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் சார்பில் வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை விருத்தாசலம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ஜோசப் ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

துணை கண்காணிப்பாளர் ரங்கநாதன், தலைமை தபால் அதிகாரி சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் தபால் அலுவலக ஊழியர்கள் தேசிய கொடியை கையில் பிடித்தபடி பேரணியாக சென்றனர். தலைமை தபால் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி ஜங்ஷன் சாலை, பாலக்கரை, மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தது.


Next Story