சுதந்திர தின விழா கொண்டாட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
நகராட்சி அலுவலகம்
திருவாரூர் நகராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் நகரசபை துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், நகராட்சி ஆணையர் பிரபாகரன், நியமனக்குழு உறுப்பினர் பிரகாஷ், முன்னாள் நகரசபை துணைத்தலைவர்கள் செந்தில், சங்கர், ஒப்பந்தக்குழு உறுப்பினர் அசோகன், நகராட்சி மேலாளர் முத்துகுமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நகராட்சி கவுரிசாமி பள்ளி, ஜி.ஆர்.எம். உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம், துணை தலைவர் தியாகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடவாசல்
குடவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு துணைத்தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி முருகேசன் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.
குடவாசல் ஆவின் பாலகத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் வக்கீல் சிவசங்கரன் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். சீதக்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊராட்சி தலைவர் ராமலிங்கம் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
குடவாசல் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் கிளை மேலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். குடவாசல் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் குருநாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரபாகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு ஒன்றியக்குழு துணை தலைவர் தென்கோவன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.குடவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது.