மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா
x

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.

விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், பல்கலைக் கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்கலைக்கழக தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு நடந்தது.


Next Story