வித்யா மழலையர் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா
வித்யா மழலையர் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை
ஆற்காடு அருகே காவனூர் பகுதியில் உள்ள வித்யா மழலையர் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சாம்பசிவபுரம் சம்பத் தலைமை தாங்கினார். பெருமாள், கணபதி, செந்தில்குமார், ராஜேஷ், விவேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாகக்குழு சுப்பிரமணியன் வரவேற்றார். காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித் குமார் தேசிய கொடியை ஏற்றினார். நிர்வாக அலுவலர் குணசேகரன், தாமரைச்செல்வி ஆகியோர் சுதந்திர தின விழா குறித்து பேசினர். ஆசிரியை இளையபாரதி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியை அமுதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story