பள்ளிக்கூடத்தில் சுதந்திர தினம் கொண்டாட்டம்


பள்ளிக்கூடத்தில் சுதந்திர தினம் கொண்டாட்டம்
x

பள்ளிக்கூடத்தில் சுதந்திர தினம் கொண்டாட்டப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை யூனியன் புதுக்குளம் பஞ்சாயத்து மல்லக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் சி.முத்துக்குட்டி பாண்டியன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்மஸ்ராணி, உதவி ஆசிரியர் ரூபேஷ் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் வீரளப்பெருஞ்செல்வி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.


Next Story